இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது தேசிய சுதந்திர தினவிழா இன்று செவாய்க்கிழமை (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார தலைமையில் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அக்மீமன கமகே ரொஷான் பிரியசஞ்சனவினால் தேசியக்கொடி ஏற்றினார்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இரண்டு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
“தேசிய மறுமலர்ச்சிக்கு தயாராகுவோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்பகிறது. மாவட்ட செயலக வளாகத்தில் மர நடுகை இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,மாவட்ட செயலக ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.
Trending
- எம்பியானார் சமந்த ரணசிங்க
- ஜனாதிபதியின் தலைமையில் நாளை சர்வ கட்சிக் கூட்டம்
- டொமினிகனில் கூரை இடிந்து விழுந்து 98 பேர் பலி
- கதிர்காம மாகாண சபையின் முன்னாள் தலைவர் கைது
- 40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளன
- 13 உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கைது
- கோசல நுவனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி
- போராடித் தோற்றது கொல்கத்தா