தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான பதற்றங்களைத் தீர்க்க மத்தியஸ்தராக தலையிடுமாறு வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் வரலாற்று தேரவாத பௌத்த உறவுகளை எடுத்துரைத்த தேரர், இரு நாடுகளுக்கும் இடையிலான இரக்கமுள்ள உரையாடலை எளிதாக்குவதற்கு ஜனாதிபதி நல்ல நிலையில் இருப்பதாகக் கூறினார்.
பௌத்த ஈடுபாட்டுடன் உடனடி இராஜதந்திர ஈடுபாட்டை வலியுறுத்தும் இந்த முன்மொழிவை சங்கத்தின் உச்ச சபை ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.
பௌத்த நாடுகளாக, தாய்லாந்தும் கம்போடியாவும் அமைதியான தீர்வு மூலம் தங்கள் பகிரப்பட்ட ஆன்மீக , கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தேரர் வலியுறுத்தினார்.