Tuesday, January 28, 2025 11:47 am
சர்வதேச கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இந்திய மீனவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது, இரண்டு மீனவர்களுக்கும் கடற்படை அதிகாரி ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.அப்போது தவறுதலாக துப்பாக்கி வெடித்ததால் இந்திய மீனவர்கள் இருவரின் காலில் காயம் ஏற்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.