Wednesday, March 12, 2025 11:26 am
சம்பியன் கிண்ணத் தொடரில் மிகச்சிறப்பான பங்களிப்பு ஆற்றிய வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ர்வர்த்தியும் ஒருவர். கடைசி நேரத்தில் இந்த தொடருக்கான அணியில் இடம்பெற்ற அவர் மொத்தம் 9 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வருண், சர்வதேசக் கிரிகெட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதுவும் கிரிக்கெட்டைப் பற்றிய ‘ஜீவா’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாதது. விஷ்ணு விஷால் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஜீவா’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தகக்கது.