Monday, July 14, 2025 6:09 am
விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ரப் (Rap) பாடகர் வேடன் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார்.
விஜய் மில்டன் இயக்கி வரும் குறித்த திரைப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், பால் டப்பா, அம்மு அபிராமி, கிஷோர் டிஎஸ், விஜேதா, பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் விரைவில் வெளியாகவுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்னின் மகனான வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ரப் இசைப் பாடகராக உள்ளார். அவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.