Thursday, July 10, 2025 8:11 am
சட்டவிரோத சூதாட்ட செயலி விவகாரத்தில் தென்னிந்திய நடிகர், நடிகைகள் 29 பேர் மீது அமுலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
நடிகர்கள் ராணா, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ்ராஜ், நடிகைகள் நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, ப்ரணிதா, அனன்யா நாகல்லா உள்ளிட்ட 29 பேர் மீது ஒன்லைன் சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில யூடியூபர்கள் மீதும் அமுலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
சூதாட்ட செயலியால் பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தடை செய்யப்பட்ட சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியவர்கள் மீது அமுலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.