ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா அடுத்த வாரம் தன்னைச் சந்திக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் இஷிபாவின் பயணம் அவர்களின் சந்திப்பு திதி உள்ளிட்ட பிற விவரங்கள் பற்றிய விபரங்கள் எதனையும் ட்ரம்ப் தெரிவிக்கவில்லை. இஷிபா அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக ஆளும் கட்சி மூத்த பாராளுமன்ற உறுப்பினரிடம் ஜப்பான் அரசு கூறியுள்ளது.
இஷிபா, ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான முதல் நேருக்கு நேர் சந்திப்பிற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஜப்பானிய வெளியுறவு மந்திரி தகேஷி இவாயா, ட்ரம்ப் பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு வாஷிங்டனில் தனது புதிய அமெரிக்க பிரதிநிதி மார்கோ ரூபியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Trending
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை