2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
உலக அமைதி ,பாதுகாப்பை நிலைநிறுத்த ட்ரம்ப் எடுத்த முயற்சிகள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளதாக நெதன்யாகு வலியுறுத்தி, “அவர் அந்த பரிசுக்கு தகுதியானவர்” எனக் கூறி, நோபல் பரிசு குழுவிற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நான் என்ன செய்தாலும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது என டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
2025 நோபல் அமைதி பரிசுக்காக இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறுவது, அவரது சர்வதேச அரசியல் பங்களிப்புகள், குறிப்பாக இஸ்ரேல் – அரபு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களில் அவரது செயல்பாடுகள் காரணமாகவே என அனுமானிக்கப்படுகிறது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!