ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் வடக்கு ஜப்பானில் நுழைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுனாமி அலை 30 சென்ரிமீற்றர் உயரம் கொண்டதாக காணப்பட்டதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்கரைகளில் ஒசாகாவிலிருந்து நகரின் தெற்கே உள்ள வகயாமா வரை மூன்று மீற்றர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் முன்னதாக எதிர்வு கூறியது.
இந்த சுனாமி அலைகள் காரணமாக இதுவரை எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என ஜப்பானின் தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹொக்கைடோ முதல் ஒகினாவா வரையிலான ஜப்பானிய கடற்கரையில் உள்ள 133 நகர சபைகளிலிருந்து 900,000 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நிலைமை காரணமாக இந்தியப் பெருங்கடலில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Trending
- அப்பல்லோ டயர்ஸ் இந்திய அணியுடன் இணைந்தது
- ‘குழந்தைகள் தின தேசிய வாரத்தை’ அறிவித்தது இலங்கை
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஐந்து மாடி கட்டடம் அமைச்சரவை அங்கீகாரம்
- வெளிநாட்டு இலங்கையர் வாக்களிப்பை ஆய்வு செய்ய குழு நியமனம்
- முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவை சீனத் தூதர் சந்தித்தார்
- 14வது உலக சாதனை மூன்றாவது உலக சம்பியன்டுப்லாண்டிஸ்சாதனை
- உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற அணிகள்
- தேசிய அணிக்கு திரும்ப மனுவல் நொயர் தயாராக உள்ளார்