ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ,இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி டிரின் தீ டேம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று(21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது , வியட்நாமின் உதவியுடன் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் ,எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் ஆகியன பற்றி விரிவாக விரிவாக ஆராயப்பட்டது.
விவசாயம் ,சுற்றுலா ஆகியது துறைகளிலும் முதலீட்டு ஊக்குவிப்பிலும் இலங்கையுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வியட்நாம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
Trending
- இந்திய எதிர்ப்பால் பாகிஸ்தானுடனான கடற்பயிற்சி இரத்து
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்