செம்மணி சிந்துபதி கல்லறையில் மேலும் 11 எலும்புக்கூடு எச்சங்களை அகழ்வாராய்ச்சி குழுக்கள் கண்டுபிடித்துள்ளன, இதனால் மீட்கப்பட்ட மொத்த எச்சங்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
பள்ளிப் பை, ஒரு பொம்மை, குழந்தைகளின் வளையல்கள்,பால் போச்சி போன்ற பொருட்களும் மீட்கப்பட்டன. க
கல்லறைகளின் விரிவான ஸ்கேன் திட்டமிடப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் சட்த்தரணி வி.கே. நிரஞ்சன் கூறினார். ஸ்கேன் செய்வதற்கான அவசியம் குறித்து யாழ்ப்பாணம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மன்னாரில் 342 எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த செம்மணி தளம் இப்போது இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.