இலங்கையில் சுமார் 40% காவல்துறை பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
சபரகமுவ மாகாணத்தில் பொலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு பள்ளிப் பொருட்களை விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
” பொலிஸ் அதிகாரிகளின் நிலையைப் பார்த்தால், சுமார் 20% முதல் 40% பேர் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30% பேர் இன்னும் முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. மீதமுள்ள 30% பேர் மட்டுமே நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர். சில அதிகாரிகள் வீட்டில் உள்ள பிரச்சினைகள், வேலை தொடர்பான மன அழுத்தம் , பிற காரணிகளால் பல்வேறு தொற்றாத நோய்களை உருவாக்கியுள்ளனர்,” என்று அவர் விளக்கினார்.
பொலிஸ் அதிகாரிகளின் சம்பளம் தொடர்பான கவலைகள் குறித்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு சாதகமான சம்பள அமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.