தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்க சீனாமுயற்சிக்கிறது. இதற்காக தாய்வான் அருகே அடிக்கடி போர்ப்பயிற்சி, எல்லைக்குள் போர் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பீஹாங் பல்கலைக்கழகம், பீஜிங் தொழில்நுட்ப நிறுவனம், நான்ஜிங் விமானவியல் விண்வெளி பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஏழு பல்கலைக்கழகங்களுக்கு தாய்வான் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக, தாய்வான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீன பல்கலைக் கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதனுடன் தைவானில் உள்ள கல்லூரிகள் , ஆராய்ச்சி நிறுவனங்கள் எவ்வித கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தெரிவித்துள்ளது.
Trending
- இந்தியாவுடன் அணுசக்தி மோதலுக்கு வாய்ப்பில்லை பாகிஸ்தான் – ஷெபாஸ் ஷெரீப்
- பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
- முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை
- புலம்பெயர் தொழிலாளர் அனுப்பிய பணம் 600 மில்லியன் டொலரை தாண்டியது
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்