Tuesday, February 25, 2025 10:10 am
பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிக்கு பயங்கரவாதிகளால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களை அல்லது வெளிநாட்டு பிரஜைகளை கடத்தும் திட்டம் பற்றிய பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கையால் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா டுடே அறிக்கையின்படி, பாகிஸ்தான் உளவுத்துறை பணியகம் “இஸ்லாமிக் ஸ்டேட் கொராசன் மாகாணத்தில் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது, இது சம்பியன்ஸ் டிராபி 2025 இல் பங்கேற்கும் வெளிநாட்டினரை பணத்திற்காக கடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது”.
இந்த பயங்கரவாத அமைப்பு சீனா, ,அரபு நாட்டினரை குறிவைக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்காக அவர்கள் துறைமுகங்கள், விமான நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஏற்கனவே கண்காணிப்பை தொடங்கியுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை நிறுவனத்தால் (GDI) ISKP தாக்குதல்கள் நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
CNN-News18 இன் மற்றொரு அறிக்கை, “தெஹ்ரிக்-இ தலிபான் பாகிஸ்தான் (TTP), ISIS மற்றும் பலுசிஸ்தானை தளமாகக் கொண்ட பிற குழுக்கள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியது.
பாக்கிஸ்தானின் ரேஞ்சர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் நடவடிக்கையில் இறங்கியது, இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புக் குழுக்களை நிலைநிறுத்தியது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை நடத்தும் மூன்று நகரங்களான லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகளின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பாகிஸ்தானில் புதிதல்ல. 2009 ஆம் ஆண்டு இலங்கை அணியின் பஸ்ஸின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இலங்கையின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் ஐ.சி.சி எலைட் பேனல் நடுவர் ஒருவர் காயமடைந்தார்.

