வரி ஏய்ப்பைத் தடுக்கவும் இணக்கத்தை அதிகரிக்கவும், சுங்க மீறல்களில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட தனிநபர்கள்,நிறுவனங்களின் பெயர்களை ஜூன் 2025 முதல் இலங்கை சுங்கத்துறை பகிரங்கமாகப் பெயரிடத் தொடங்கும்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் முழு விசாரணைகளுக்குப் பிறகு குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்படுவார்கள்.
பணமோசடி மற்றும் தொடர்புடைய குற்றங்களை விசாரிக்க ஒரு சிறப்புப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது, கடுமையான வழக்குகள் குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) மற்றும் மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) க்கு பரிந்துரைக்கப்படுகின்றன.