Sunday, April 12, 2026 9:41 pm
பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை(12) வந்தடைந்தன.
‘PNS TAIMUR’ ,PNS ASLAT’ ஆகிய இரண்டு போர்க்கப்பல்களும் சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படை மரபுகளுக்கமைய இலங்கைக் கடற்படையினரால் அக்கப்பல்கள் வரவேற்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் NIAMAT SAEED KHAN செயற்படுகிறார்.‘PNS ASLAT’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெடன் NADIR MATEEN AFRIDI செயற்படுகின்றார்.
இந்த போர்க்கப்பல்கள் இலங்கைக் கடற்படையுடன் இணைந்து இருதரப்பு கடற்படைப் பயிற்சியொன்றிலும் ஈடுபடவுள்ளது.

