சீன விஞ்ஞானிகள் செயற்கை கருப்பையுடன் கூடிய மனித உருவ ரோபோவை உருவாக்கி வருகின்றனர்.
இது மனிதக் குழந்தையை கருத்தரித்து, வளர்த்து, பெற்றெடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
இந்தத் தொழில்நுட்பத்தை கைவா டெக்னாலஜி (Kaiwa Technology) என்ற சீன நிறுவனம் உருவாக்கி வருகிறது.
இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டொக்டர் ஜாங் கிபெங் தலைமை தாங்குகிறார்.
இந்த ரோபோவில் செயற்கை கருப்பை பொருத்தப்பட்டிருக்கும். இது கருவின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும், செயற்கை பனிக்குட நீரையும் கொண்டிருக்கும்.
இந்த கர்ப்ப ரோபோவின் முன்மாதிரி 2026 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் கருத்தரிப்பதில் சிரமப்படும் தம்பதிகளுக்கு ஒரு தீர்வாக அமையலாம்.
இந்த தொழில்நுட்பம், 2017 இல் செயற்கை கருப்பை திரவத்துடன் கூடிய, ‘பயோபேக்’ மூலம் ஆடுகள் கருவிலிருந்து வளர்க்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.