இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயர் 2008 மே மாதம் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்ப்டையதாகச் சந்தேகப்படும் இருவர் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) அதிகாரிகளால் நவகத்தேகம , எலயபத்துவ பகுதிகளில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் இடுவடும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுப் பணியாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சிஐடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை பத்திரிகையாளர் கீத் நொயர் 2008 மே 22 அன்று தெஹிவளையில் உள்ள வைத்தியா சாலையில் கடத்தப்பட்டார், அதன் பிறகு அவர் தாக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.