பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த பிறகு, காஸா பகுதியை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும் என்றும், அதை மீண்டும் அபிவிருத்தி செய்யும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மீள்குடியேற்ற நடைமுறையை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த விவரங்களை வழங்காமல் ட்ரம்ப் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
“அமெரிக்கா காசா பகுதியைக் கைப்பற்றும், அதனுடன் நாங்களும் ஒரு வேலையைச் செய்வோம்,” “நாங்கள் அதை மேம்படுத்தப் போகிறோம், ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்கப் போகிறோம், மேலும் இது முழு மத்திய கிழக்கு நாடுகளும் பெருமைப்படக்கூடிய ஒன்றாக இருக்கும்.”அந்த இடம் “உலக மக்களுக்கு” ஒரு வீடாக மாறக்கூடும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேலுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காசாவிற்கு ஒரு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் கூறினார்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை