Tuesday, July 15, 2025 5:58 am
மஹியங்கனை – பதுளை வீதியில் உள்ள மகாவலி வியன கால்வாயில் இன்று காலை கார் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாபகடவெவ பொலிஸ் பயிற்சிப் பள்ளியின் அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் , பிரதேசவாசிகளுடன் இணைந்து, கால்வாயிலிருந்து வாகனத்தை மீட்டனர்
வாகனத்திற்குள் இருந்த இருவர் உடனடியாக மஹியங்கனை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது.