சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் உலகின் மிகப்பெரும் நிறுவனம் அமெரிக்க இராணுவம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
இது உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் ரியான் தாம்பஸ் தலைமையிலான , ஜூலை 2 அன்று பிஎல்ஓஎஸ் கிளைமேட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் விரிவான உலகளாவிய செயல்பாடுகள் வெளிநாட்டு தளங்களை பராமரிப்பது முதல் பயிற்சிகளை நடத்துவது, துருப்புக்கள், உபகரணங்களை கொண்டு செல்வது வரை என அதிகமான கார்பன் வெளியேற்றத்தை ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது.,1975 முதல் 2022 வரையிலான அமெரிக்க ராணுவச் செலவு மற்றும் பாதுகாப்புத் துறையின் எரிசக்தி நுகர்வு குறித்த பொதுவில் கிடைக்கும் தரவுகளை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது.