Friday, June 20, 2025 7:16 am
தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் ,சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால கடந்த வியாழக்கிழமை காலமானார்
அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையின் இனைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன் கேலிச் சித்திர படைப்புகளுக்காக 4 விருதுகளையும் 2 கலசப்பதக்கங்களையும் அவர் பெற்றுள்ளார்.

