காசாவில் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இரவுகளில் (02,03) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் 100 இற்கும் மேற்பட்ட பலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டனர்.
இதில் 51 பேர் மிகவும் தேவையான மனிதாபிமான உதவியைப் பெற முயன்றவர்கள் என மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை(03) தெரிவித்தன.
தெற்கு காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, இரவில் ஒரு கூடார முகாமைத் தாக்கியதில் பல குடும்பங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. 12 வயதுக்குட்பட்ட ஆறு குழந்தைகள் உட்பட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.