Monday, May 5, 2025 4:57 am
கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இத் துப்பாக்கிச் சூட்டில் தெஹிவளையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, பாதிக்கப்பட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.