Wednesday, April 16, 2025 2:35 am
கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஓடும் சிறிய லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வாகனம் மட்டும் சேதமடைந்தது.
மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.