சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்துகொண்டு பதவிகளை அனுபவித்த துரோகிகளினாலேயே அட்டாளைச்சேனை – பாலமுனை பிரதேச இரு வட்டாரங்களும் தோற்பதற்கான காரணம் என்று அம்பாறைமாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
உரம் போட்ட கரங்களுக்கு தரம் கொண்ட நன்றி தெரிவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை பீச் ரிசோட்டில் நடைபெற்றது,. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்
, எமது கட்சிக்குள் இருந்துகொண்டு மாற்றுக் கட்சியினரிடம் கள்ளத்தனமாக தொடர்பை வைத்து கடைசி நிமிடம் வரை கட்சியில் தேர்தல் கேட்பதாக கூறி கட்சியை ஏமாற்றினார்கள். அவ்வாறான துரோகிகள் இப்போது மக்கள் மத்தியில் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு இராஜாங்க அமைச்சர்களும் இருந்தகொண்டு தங்களுக்கான தரகர்களையும் குழுக்களையும் உருவாக்கி கட்சியையும், கட்சியின் கட்டமைப்புக்களையும் சீர்குலைத்துள்ளார்கள் என்பது இத்தேர்தலின் மூலம் கண்டறிந்துள்ளோம்.
இன்று கட்சி சிறப்பாக புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் யார் யாரெல்லாம் எமது வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கான பல திட்டங்களை முன்னெடுத்த போதிலும், நானும் தேர்தல் குழுவினரும் அந்தத் திட்டங்களை முறியடித்து வெற்றி கண்டுள்ளோம். இது எமது ஒற்றுமையின் பலனால் எமக்கும் எமது கட்சிக்கும் கிடைத்த வெற்றியின் வெளிப்பாடாகும்.அட்டாளைச்சேனையில் கட்சிக்குள் இருந்து கட்சிக்கு எதிராக செயற்படுவதற்கு 28 நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. தேர்தல் காலங்களில் மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டது. இதை வெளிப்படையாக இனம் கண்டுள்ளோம் என்றார்.
Trending
- கொத்மலை பேருந்து விபத்து – அரசாங்க இழப்பீடு பிரதேச செயலகங்களுக்கு மாற்றப்பட்டது
- சந்தானத்தின் பட பாடலுக்கு எதிராக புகார்
- ஆனையிறவு உப்பளத்தில் தொழிலாளர்கள் போராட்டம்
- அர்ச்சுனா எம்.பியின் பாராளுமன்ற நியமனத்திற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
- சிரியா மீதான தடைகளை நீக்கும் திட்டத்தைசவூதியில் அறிவித்தார் ட்ரம்ப்
- தமிழ் இனப் படுகொலையை முன்னிட்டு ஊர்திப்பவனி
- கொழும்பு சந்தையில் தங்கத்தின் வீழ்ந்தது
- உயர் இரத்த அழுத்த மரணம் அதிகரிப்பு