Wednesday, March 5, 2025 7:47 am
அவுஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். துபாயில் நடந்த சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டிதான் அவர் கடைசியாக விளையாடிய போட்டியாகும். அந்த போட்டியில் அவர் அவுஸ்திரேலியாவுக்காக அதிகபட்சமாக 73 ஓட்டங்கள் எடுத்தார்.
35 வயதான இவர் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 43.28 சராசரியுடன் 5800 ஓட்டங்கள், 86.96 ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டுள்ளார், இதில் 12 சதங்கள் , 35 அரைசதங்கள் அடங்கும். ஒருநாள் போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்காக அதிக ஓட்டங்கள் எடுத்த 12வது வீரராக ஸ்மித் உள்ளார். 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு எதிராக 164 ஓட்டங்கள் என்கிற தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். லெக்ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான இவர், 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 90 கேட்சுகளையும் எடுத்துள்ளார்.