Wednesday, September 24, 2025 6:35 am
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் உடன் கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது எக்ஸ் வலைத்தள கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை, உயர் ஸ்தானிகரினால் அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது.