இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நீண்ட நெடிய பாதையை தேர்வு செய்து பயணம் செய்தார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) நவம்பர் 2024 இல் போர்க்குற்றங்களுக்காக பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது.
நெதன்யாகுவின் விமானத்தின் பாதை மத்தியதரைக் கடல் வழியாக கண்காணிக்கப்பட்டு, பிரான்ஸ், ஸ்பெய்ன், போத்துகல், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளைத் தவிர்த்து பறந்தது.
இந்த நாடுகள் ICC உத்தரவிற்கு உடன்படுவதாக கையொப்பமிட்டவை. அதனால் நெதன்யாகு அந்த நாடுகளின் எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்ய வேண்டியிருக்கும்.
இந்த விமான பயணத்திற்காக இஸ்ரேல் தனது வான்வெளியைப் பயன்படுத்த பிரான்ஸ் அனுமதித்திருந்தாலும், பயணத் திட்டங்கள் வழியில் மாறியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கும், பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சமீபத்தில் மோசமடைந்துள்ளன.
காசாவில் வன்முறையை நிறுத்த இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க பிரான்ஸ் சர்வதேச இராஜதந்திர முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இதில் இந்த வாரம் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதும் அடங்கும்.
நெதன்யாகு அங்கீகாரத்தை கடுமையாக எதிர்த்தார்.
விமான பாதை மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை இஸ்ரேல் அரசாங்கம் வழங்கவில்லை.