Friday, August 29, 2025 8:50 am
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை சீராக முன்னேறி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) உதவித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அவரது உடல்நிலை தொடர்பான அனைத்து முடிவுகளும் அவரது குடும்பத்தினரால் எடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தெரிவித்தார்.

