Wednesday, July 2, 2025 7:09 am
ஏர் இந்தியா AI 171 விபத்தில் இறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஏர் இந்தியா, போயிங் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 12 அன்று அஹமதாபாத்தில் இருந்து இலண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணிகள் ,பணியாளர்கள் உட்பட, தரையில் இருந்த 34 பேரும் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் 181 பேர் இந்தியர்கள், 52 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமம், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபா இழப்பீடு அறிவித்திருந்தது.