ஏமன் தலைநகர் சனா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தின, அவை அரசு மற்றும் இராணுவ தளங்களை குறிவைத்ததாக ஹூதிகளால் நடத்தப்படும் அல்-மசிரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
நகரின் மத்திய, தெற்கு ,தென்மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள ஜனாதிபதி மாளிகை, தலைநகர் செயலகம், மாநில எண்ணெய் நிறுவன கட்டிடம், எரிபொருள் கிடங்குகள் , மின் நிலையங்கள் போன்றவற்றின் மீது விமானங்கள் தாக்குதல் நடத்தின.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், விவரங்களை வழங்காமல் ஒரு அறிக்கையில் தாக்குதல்களை உறுதிப்படுத்தினார். தாக்குதல்கள் முடிவடைந்து மின் நிலையங்கள், ஜனாதிபதி வளாகம் எண்ணெய் கிடங்கைத் தாக்கியதாக இராணுவ வானொலி தெரிவித்துள்ளது.
ஏமனின் ஹூதி இயக்கம் டெல் அவிவ் மீது ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல்கள் நடந்தன. இந்த ஏவுகணைத் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்தன, ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
சனா மற்றும் ஹொடைடா துறைமுகம் உட்பட வடக்கு ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹூதிகள், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி, நவம்பர் 2023 முதல் இஸ்ரேல் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஹூதியின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.