எரிபொருள் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துடன் துறை சார்ந்த பிரச்சினைகளை விவாதிக்க உள்ள நிலையில், எரிபொருள் விநியோகம் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது அதிகரித்துள்ளது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கூறியது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது எரிபொருள் விநியோகம் இரட்டிப்பாகி உள்ளது. விநியோகம் இன்னும் சாதாரணமாக இயங்குவதால், எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் தலைவர் ஜே. ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட 3% தள்ளுபடியை ரத்து செய்து புதிய சூத்திரத்துடன் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக உத்தரவுகளை நிறுத்துவதாக எச்சரித்த நிலையில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கிடையில், ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் (LFDA) நிர்வாகக் குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடுவோம் என்றும், அதன் பிறகு ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.