குற்றவியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் எட்டுப்பேரை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ட்ரம்ப் எடுத்த முடிவுக்கு கூட்டாட்சி நீதிமன்றத் தீர்ப்பு தடைவிதித்துள்ளது.
மியான்மர் , கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் எனவும் ஏனையோர் , வியட்நாம், லாவோஸ், மெக்சிகோ தெற்கு சூடானைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்
அந்த நாடுகள் அவர்களை ஏற்க மறுத்ததால், செவ்வாய்க்கிழமை அவர்களை தெற்கு சூடானுக்கு விமானம் மூலம் அனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர் . அந்த நாடு தொடர்ச்சியான உறுதியற்ற தன்மை , பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை பயண ஆலோசனையின் கீழ் உள்ளது.