Sunday, April 12, 2026 5:18 pm
பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவர் அறிவிக்கப்பட்டார். அதேபோல் மாற்று வேட்பாளராக அவரின் மனைவி நித்தியா அறிவிக்கப்பட்டார். இரண்டு பேர் சார்பிலும் அந்த தொகுதியில் வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் வேட்புமனு பரிசீலிக்கப்பட்ட போது அருண்குமார், வித்யா இருவரின் மனுவும் முழுமையாக நிரப்பப்படவில்லை என செய்திகள் வெளியானது. அதோடு வேட்புமனு பரிசீலிக்கப்பட்ட அன்று அருண்குமார். நித்யா இருவரும் தேர்தல் அலுவலகத்துச் செல்லவில்லை. தவெக நிர்வாகிகளாலும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே எங்கள் வேட்பாளரை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்று தவெக நிர்வாகிகள் போராட்டம் நடத்தினார்கள். அதன்பின் பொலிஸார் பேச்சுவார்த்தை நடத்தி அதை கலைத்தனர். ஒருபக்கம், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. எனவே, மொத்த தவெக வேட்பாளர்களின் எண்ணிக்கை 234-லிருந்து 233-ஆக குறைந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த ஆதவ் அர்ஜுனா ‘எங்கள் தலைவர் ஒவ்வொரு தொகுதிகளும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார். மற்ற கட்சிகள் பணம் கொடுப்பார்கள். நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களை சந்தியுங்கள். உங்கள் முகத்தை பார்த்தால் அவர்கள் வாக்களிப்பார்கள்’ என்று தெரிவித்தார்.
ஆனால் அப்படியிருந்தும் எடப்பாடி தொகுதியில் நிறுத்தப்பட்ட ஒரு கருப்பு ஆடு பழனிச்சாமியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தலைமுறைவாகிவிட்டது. பொதுவாகவே ஒரு புதிய கட்சி வந்தால் அந்த கட்சியை உடைக்க இப்படித்தான் பல விஷயங்களை பலரும் செய்வார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு நாங்கள் தேர்தலில் பதிலடி கொடுப்போம்’ என்று பேசியிருக்கிறார்.

