ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று(28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்தார்.
இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு தர அதிகாரியான திருமதி பீ.ஏ.ஜீ பெர்னாண்டோ, இதற்கு முன்னர் மேல் மாகாணக் கல்வி, கலாசார மற்றும் கலை நடவடிக்கைகள், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
Trending
- தென்னிந்திய திரை உலகின் 90 கால கட்ட பிரபலங்களின் ஒன்றுகூடல்
- ஆடுகளத்தில் முசோலினியின் கொள்ளுப் பேரன்
- மணல் அகழ்வு விவகாரம் பருத்தித்துறை பிரதேச சபையில் கடும் வாதப்பிரதிவாதம்
- செம்மணியில் 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
- மட்டக்களப்பு புகையிரத நிலைய வீடுதிபகுதியில் பாரிய தீ
- தனியார் பஸ், கார் நேருக்கு நேர் மோதி விபத்து
- பக்தர் வெள்ளத்தில் நல்லூர் கொடியேறியது
- கண்டி பெரஹராவிற்காக விசேட ரயில் சேவைகள்