Thursday, July 3, 2025 10:26 am
போர்த்துக்கலின் சர்வதேச உதைபந்தாட்ட வீரரும், லிவர்பூல் கழக வீரருமான டியோகோ ஜோட்டா (Diogo Jota) வியாழக்கிழமை(03) ஸ்பெயினில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார்.
வடமேற்கு ஸ்பெயினின் ஜமோரா பகுதியில் உள்ள பலாசியோஸ் டி சனாப்ரியா அருகே A-52 நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஜோட்டாவும் அவரது சகோதரரும் லம்போகினி காரிலிருந்து, மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லும்போது காரின் ரயர் வெடித்தது. இதனால் கார் சிறிது நேரத்திலேயே வீதியை விட்டு விலகி தீப்பிடித்து எரிந்ததால் சகோதரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.