உக்ரைன் முழுவதும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்து அதன் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலை ரஷ்யா நடத்தியதால், நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளது.
உக்ரைன் அதிகாரிகளின் கூற்றுப்படி, சமீபத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் , மூன்று குழந்தைகள் உட்பட 38 பேர் காயமடைந்தனர்.
கடந்த வாரத்தில் மட்டும், ரஷ்யப் படைகள் உக்ரைனில் சுமார் 1,270 ட்ரோன்கள், 39 ஏவுகணைகள், கிட்டத்தட்ட 1,000 கிளைடு குண்டுகளை வீசியதாக உக்ரைன் ஜனாதிபதி கூறினார்.