Saturday, January 10, 2026 3:51 pm
ஈரானில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் ஈரான் முழுவதும் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் தான் அமெரிக்க அ ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஈரான் மக்களுக்காக அந்த நாட்டின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி உதவி கேட்டுள்ளார். இது ஈரானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் கடந்த மாதம் 28 ம் திகதி முதல் அங்குள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கும், ஈரான் படைகளுக்கும் பல இடங்களில் சண்டை நடக்கிறது. இப்போது 62 பேர் பலியாகி உள்ளனர். 2,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தான் ஈரான் பட்டத்து இளவரசரான ரெசா பஹ்லவி அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அவர் அமெரிக்க அஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் உதவி கேட்டுள்ளார். இந்த ரெசா பஹ்லவி தான் மக்கள் போராட்டத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இவர் ஈரானின் அயதுல்லா கமேனிக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர். இதனால் தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் ஈரானுடன் பகையோடு இருக்கும் ட்ரம்பிடம் உதவி கேட்டுள்ளார்.

