Saturday, April 26, 2025 6:54 am
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது ஈக்வடார் கடற்கரைக்கு அருகில் நேற்று (25) உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நிலநடுக்கம் 23 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த எச்சரிக்கை பின்னர் திரும்பப் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

