Saturday, February 8, 2025 2:57 pm
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியன இன்று சணிக்கிழமை[8] பணயக்கைதிகளையும் கைதிகளையும் பரிமாறிக் கொண்டன.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 183 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட 183 பேரில் பெரும்பாலானோர் காஸாவிற்கு அனுப்பப்பட்டுள்ளனர், 42 பேர் மேற்குக் கரைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஹமாஸால் விடுவிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளில் ஒருவர் மெலிந்த நிலையில் காணப்பட்டார்