காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 97 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், . 138 பேர் காயமடைந்ததாகவும் காஸாவை தளமாகக் கொண்ட சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
பல பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு அடியிலும் வீதிகளிலும் உள்ளனர், அம்புலன்ஸ்கள் , சிவில் பாதுகாப்பு குழுவினரால் அவர்களை அடைய முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.
காசாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறை மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில் அவற்றின் திறனை மீறி இயங்குவதாகவும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்கள், குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.