ஒவ்வொரு இலங்கை குடிமகனும் அவரவர் தாய்மொழிகளிலும் சைகை மொழியிலும் அத்தியாவசிய சேவைகளை அணுகக்கூடிய வகையில் தேசிய கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.
மொழி பிரிவினையை உருவாக்காமல், பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த அனைத்து தனிநபர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு ஊடகத்தை உருவாக்க அனைத்து தரப்பினரும் பாடுபட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய மொழிகள் வாரமான “நல்லிணக்கத்திற்கான பாதையின்” நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்துக்களை தெரிவித்தார்.
“ஒன்றாகப் பேசுங்கள் – ஒன்றாக வாழுங்கள்” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட தேசிய மொழிகள் வாரம், தேசிய மொழிகள் தினத்தைக் குறிக்கும் வகையில் ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பித்து ஏழு நாட்கள் தொடர்ந்தது. நிறைவு விழா பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மேலும் கருத்துரைகளை வழங்கிய பிரதமர்,
சில சமூகங்கள் நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், பாடசாலைகள், அரசு நிறுவனங்கள் அல்லது நிர்வாக அலுவலகங்கள் போன்ற முக்கியமான நிறுவனங்களில் தங்கள் சொந்த மொழியில் தொடர்பு கொள்ள வாய்ப்பு இல்லை என உணர்ந்தால், அது சேவை வழங்கல் தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில், மக்கள் தாங்கள் ஒதுக்கப்பட்டதாக உண்மையிலேயே உணரத் தொடங்கலாம். எனவே, அனைத்து இனக்குழுக்களுக்கும் சமமான மொழியியல் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வது அவசியம்.
எனவே, சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மொழிகளைக் கற்றுக்கொள்ளக்கூடிய பாடசாலைகளையும், நோயாளிகள் தங்களுக்கு மிகவும் வசதியாக உணரும் மொழியில் தங்கள் அறிகுறிகளை வெளிப்படுத்தி மரியாதைக்குரிய சிகிச்சையைப் பெறக்கூடிய வைத்தியசாலைகளையும், குடிமக்கள் தங்களுக்குப் புரியும் மொழியில் நீதி தேடக்கூடிய நீதி அமைப்பையும் நாம் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு