இலங்கையின் முதலாவது மெழுகு அருங்காட்சியமான எஹெலேபொல மாளிகை மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இந்த மெழுகு அருங்காட்சியகம் கண்டி காலத்தின் கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், உணவு வகைகள், தொழில்கள், கலைகளை காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலனித்துவ காலத்தில் சிறைச்சாலையாக மாறிய எஹெலேபொல வலவ்வ, சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு, பின்னர் கலாசார ஈர்ப்பான இடமாக மாற்றப்பட்டிருந்தது.
அத்துடன்,தேசிய மாவீரர்களான மொனரவில கெப்பெட்டிபொலதிசாவ, எஹலேபொல மகாதிகாரம், தேவேந்திர மூலாச்சாரி, எஹலேபொல குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய தலைவர்களின் உயிருள்ள மெழுகுச் சிலைகளை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நாட்டின் அழகையும் பெருமையையும் பறைசாற்றும் இந்த மெழுகு அருங்காட்சியகம் உள்நாட்டினரினதும் வெளிநாட்டினரினதும் கவனத்தையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இலங்கையின் கலாச்சார நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க அரச வரலாற்றை உயிர்ப்பிக்கும் மைல்கல்லாகும்.