ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று பெப்ரவரி நான்காம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இங்கு இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்களில் முக்கியமான பிரிவுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை , இலங்கைக்கு இடையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.
சுகாதாரம், கல்வி, விவசாயம், காலநிலை மாற்றம் சமாதானத்தை கட்டி எழுப்புதல் மற்றும் பாலின சமத்துவமின்மை உட்பட ஒன்பது பிரதான பிரிவுகள் தொடர்பாக கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பாக ஒன்றிணைந்து பதில் தேடுவது தொடர்பாகவும் இரு தரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
Trending
- உடுத்துறையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க டொனால்ட் டிரம்பிற்கு கடிதம்
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு – விசேட அறிவிப்பு
- கட்டுநாயக்கா- சீதுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை