இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிரி வோல்ட் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.அப்போதுசுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம் ,பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட பிரதான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சுவிட்சர்லாந்துத் தூதுவர், எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான சுவிட்சர்லாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்