இலங்கைக்கான வரியை அமெரிக்கா குறைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 20 வீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது.
அதற்காக உழைத்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரி குறைப்பு பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுடன் போட்டியிட உதவும் என ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதித்திருந்தார். பின்னர் இந்த வரிவிதிப்பு 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், இலங்கைக்கான வரி விதிப்பானது 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை இன்று அறிவித்துள்ளது.