Tuesday, April 29, 2025 5:58 am
பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் முப்பது பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் பெலியத்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பெலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

