இருதரப்பு பொருளாதார கூட்டாண்மையை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக MSME துறையை ஆதரிக்கும் நோக்கில், ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை அடையாளம் காண்பதற்கும் இந்தியா , இலங்கையின் பல்வேறு அமைப்புகளிடையே விவாதங்களை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்,எளிதாக்கி வருகிறது. இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (FIஏஓ) , இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை (NCE) பிரதிநிதிகளுக்கு இடையே இதுபோன்ற ஒரு கலந்துரையாடல் எளிதாக்கப்பட்டது.
ஓகஸ்ட் 19 ஆம் திகதி இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு (Fஈஏஓ), இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை (NCE) ஆகியவை தகவல் பகிர்வு, முதலீடு , வர்த்தகத்திற்கான பங்காளிகளை இணைத்தல் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஆராயும் நோக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மெய்நிகர் கையொப்பமிடும் விழாவில் FIEOவின் இயக்குநர் ஜெனரல் & தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அஜய் சகாய் தலைமையிலான FIEO பிரதிநிதிகளும், NCEயின் தலைவர் இந்திரா கௌஷல் ராஜபக்ஷ தலைமையிலான NCE பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் மெய்நிகர் கையொப்பமிடும் வைபவத்தில் கலந்து கொண்டனர்.