தொழிலதிபர் கௌதம் அதானி ,அவரது மருமகன் சாகர் ஆகியோருக்கு எதிரான பத்திர மோசடி 265 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சத் திட்டம் தொடர்பான விசாரணையில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் இந்திய அரசாங்கத்தின் உதவியைக் கோரியுள்ளதாக செவ்வாயன்று நீதிமன்றத் தாக்கல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு புகாரை வழங்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்க SEC நியூயார்க் மாவட்ட நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதானிகளுக்கு தனது புகாரை வழங்க இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திடம் உதவி கோரியதாக ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கௌதம் அதானிக்கு எதிரான குற்றப்பத்திரிகையில், இந்தியாவில் சூரிய சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு தொழிலதிபர் லஞ்சம் வாங்கியதாகவும், மோசடியான நிதி வெளிப்பாடுகள் மூலம் அமெரிக்க முதலீட்டா